பேருந்து கிடைக்காததால் சொந்தஊருக்கு பைக்கில் சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் விபத்தில் பலியாகினர்.
சாலை விபத்தில் உயிரிழந்த சரவணன் ,நாகராஜன் ஓசூரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் 2 பேரும் சொந்த ஊரான திண்டுக்கல் ஓட்டன்சத்திரத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். பேருந்து கிடைக்காததால் பைக்கில் சென்றுள்ளனர். அமராவதி ஆற்றுப்பாலம் அருகே லாரியை முந்தி செல்ல முயன்றபோது அவர்களது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலையே இறந்தனர்.