பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ஸ்ரீநாதா திடீரென கண்டாச்சிபுரம் காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் வழக்குபதிவு குறித்த ஆவணங்களை அவர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினர் வார விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். அதன்பின் பொதுமக்கள் கொடுக்கும் புகாரை பெற்ற உடன் உரிய விசாரணை நடத்தி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இதனை அடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதால் குற்ற சம்பவங்கள் குறைவதை பார்க்க முடிகின்றது. ஆதலால் கூடுதல் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொள்வதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறைய வாய்ப்புகள் இருக்கிறது என அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னதாகவே கண்டாச்சிபுரம் காவல்நிலையத்தைத் தூய்மையாக வைத்திருந்த காவல்துறையினரை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். மேலும் கண்டாச்சிபுரம் காவல் சரகத்தில் 50-வது கண்காணிப்பு கேமராவை காவல்துறை சூப்பிரண்டு ஸ்ரீநாதா இயக்கி வைத்துள்ளார்.