Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளை தனி தனியாக தூக்கிலிட கோரிய வழக்கு மார்ச் 5ஆம் தேதி ஒத்தி வைப்பு..!

நிர்பயா வழக்கின் விசாரணையை மார்ச் 5ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் இவர்கள் நால்வரும் ஒவ்வொருவராக தங்களுக்கான சட்ட வாய்ப்பை பயன்படுத்தி சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இதனால் இரண்டு முறை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய நாள் தள்ளிப்போனது. கடைசியாக மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 4 பேரையும் தனி தனியாக தூக்கிலிட வேண்டும் என உள்துறை அமைச்சகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது வழக்கின் விசாரணையை மார்ச் 5ஆம் தேதி ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

Categories

Tech |