Categories
தேசிய செய்திகள்

ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார்?… அவர் இங்கே இருக்கிறார்… காஷ்மீர் நிர்வாகம் பதில்..!!

ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்று வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்  கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க  முயன்றபோது அது என்னால் முடியவில்லை என்றும் கூறியிருந்தார். அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை எனவே அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

Image result for வைகோ

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்பது பற்றி வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதை தொடர்ந்து ஃபரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |