பல்கலைக் கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் பள்ளி பொதுத் தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது.. இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு நடைபெறும் என யுஜிசி அறிவித்தது.. இதற்கு பல்வேறு மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல் மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்..
இதனையடுத்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது, ‘பல்கலைக் கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும். பல்கலைக்கழக இறுதி தேர்வுகளை நடத்தாமல் மாநில அரசு மாணவர்களுக்கு பட்டம் வழங்கக் கூடாது.
தேர்வு நடத்த இயலாது என முடிவு செய்தால் யூஜிசியை மாநில அரசுகள் அணுகலாம்.. யூஜிசியை அணுகி காலக்கெடுவை நீட்டிக்க கோரலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி, மாணவர்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்குவதாகவும் அறிவித்தது.