Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : தூக்கு தண்டனையா?… மதியம் 1 மணிக்கு தீர்ப்பு- உச்ச நீதிமன்றம்..!!

நிர்பயா வழக்கில் குற்றவாளி அக்‌ஷய் குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு விசாரிக்கப்பட நிலையில் 1மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.  

2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான 6 நபர்களில் ஒருவர் மைனர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்‌ஷய் குமார் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. இதில், அக்‌ஷய் குமார் தவிர மற்ற மூவரின் சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நிர்பயா வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார், தன்னுடைய மரண தண்டனையை சீராய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Image result for Akshay Kumar, Nirbhaya case,

 

இதையடுத்து அக்‌ஷய் குமார் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி. சிங்கும் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். அக்‌ஷய் குமாரின் மனுவில் அரசை கேலி செய்வதைப் போல குறிப்பிட்டிருந்தார். அதில், காற்று மாசுபாட்டால் பெரும்பான்மை மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது, எங்களை ஏன் தூக்கிலிட வேண்டும் என்ற நக்கல் செய்யும் விதமாக கூறியிருந்தார்.

Image result for nirbhaya case

இந்தநிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு நேற்று விசாரணை தொடங்கியது. அப்போது நிர்பயா வழக்கில் சீராய்வு மனு மீதான விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே விலகினார். மேலும் நாளை (இன்று)  காலை 10 : 30 மணிக்கு வேறு ஒரு அமர்வில் சீராய்வு மனு விசாரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Image result for nirbhaya case highcourt

அதன்படி குற்றவாளி அக்‌ஷய் குமார் தரப்பில் தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை தொடங்கியது. அப்போது 4 குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிடக் கோரி வழக்கறிஞர் சஞ்சீவ்குமார் தாக்கல் செய்த மனு விசாரிக்கப்பட்டது. அக்‌ஷய் குமார் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி. சிங் தரப்பின் வாதத்தின் போது, அக்சய் குமார் அப்பாவி, எங்கள் தரப்பு வாதங்களை கேட்கவில்லை. அரசியல் ஆதாயத்திற்காக வழக்கு பெரிதாக்கபட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக  அவசர அவசரமாக அரசு தூக்கிலிட முயற்சிக்கிறது. ஊடகம், மக்கள், அரசியல் அழுத்தம் காரணமாக அக்சய்குமார் குற்றவாளியாக்கப்பட்டதாக புகார் தெரிவித்தார். மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் கூட தூக்கு தண்டனை வழங்கப்படாத நிலையில் ஏன் அக்சய குமார் தூக்கிலிட பட வேண்டும் எனவும் வாதத்தை முன்வைத்தார். இதையடுத்து நீதிபதிகள் மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |