Categories
தேசிய செய்திகள்

டெல்லி போராட்டம் : அமைதி நிலவட்டும்… “சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே காவல்துறை”.. உச்ச நீதிமன்றம் அதிருப்தி..!!

டெல்லியில் நடந்த போராட்டத்தில் பேருந்துகள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அதிருப்தியடைந்துள்ளார். 

மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு  எதிராக இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக டெல்லியிலும் நேற்று போராட்டம் வெடித்தது. குறிப்பாக டெல்லி ஜாமியா பல்கலை கழக மாணவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் பேருந்துகள் மீது தீ வைத்து எரிக்கப்பட்டது. 3-பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களும் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பலரும் காயமடைந்தனர். விடிய விடிய நடக்கும் போராட்டத்தால்  அங்கு கலவர பூமியாக காட்சியளிக்கிறது.

Image

இந்த நிலையில் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ;வழக்கு தொடரப்பட்டது. டெல்லியில் பேருந்தில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  பாப்டே, வன்முறை போராட்டங்களை அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை என்று அதிருப்தியை தெரிவித்துள்ளார். வன்முறையை  நிறுத்தினால் வழக்கை நாளையே விசாரிப்பதாக உறுதியாக தெரிவித்தார்.

Image result for india supreme court

மேலும் போராட்டம் என்ற பெயரில் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்த அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே காவல்துறை உள்ளது; முதலில் அங்கு அமைதி நிலவட்டும் யார் கலவரம் செய்தனர், யார் அமைதியாக போராடினர் என்பதை நாங்கள் இப்போது சொல்ல முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  கலவரம் நின்றால் மட்டுமே வழக்கு விசாரணை நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |