Categories
உலக செய்திகள்

மருத்துவமனைகளை தயார் நிலையில் வையுங்க….! அதிகரித்து வரும் தொற்று பாதிப்பு…. நிபுணர்களின் எச்சரிக்கை….!!

சுவிஸ் ஜனாதிபதி அந்தந்த மாநிலங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் அதிபர் கை பார்மெலின் அந்தந்த மாநிலங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கிடையே அதிகாரிகள் பலரும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மாநில அரசும் நடவடிக்கைகளை எடுப்பதில் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதேசமயம் ஜனாதிபதி கை பார்மெலின் மாநில சுகாதார இயக்குனர்களுக்கு கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அந்தந்த மாநிலங்கள் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சுவிட்சர்லாந்தில் மருத்துவமனைகளில் இருக்கும் 880 படுக்கைகளில் கொரோனா நோயாளிகளால் 184 தீவிர சிகிச்சை படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதேபோல் கொரோனா அல்லாத நோயாளிகளால் 494 படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத்தின் மத்திய அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் சுவிட்சர்லாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் இன்னும் மூன்று வாரங்களில் தொற்று பாதிப்பு விகிதம் அண்டை நாடான ஆஸ்திரியாவை போலவே உயரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |