தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மாகாண தலைநகரத்தை கடந்த 24 மணி நேரத்தில் கைப்பற்றியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்களின் ஆதிக்கம் அந்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் ராணுவமும் தலிபான்களின் இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மாகாண தலைநகரத்தை கடந்த 24 மணி நேரத்தில் கைப்பற்றியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று தலிபான்கள் நிம்ரோஸ் மாகாணத் தலைநகா் ஸராஞ்-ஐ தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து ஆப்கானின் இரண்டாவது நகரமான புகழ்பெற்ற அரசு ஆதரவு ஆயுதக் குழுத் தலைவா் அப்துல் ரஷீத் தோஸ்துமின் ஆதிக்கம் நிறைந்த ஜாவஸ்ஜன் மாகாணத் தலைநகா் ஷேபா்கான்-ஐ கடந்த 24 மணி நேரத்தில் கைப்பற்றியுள்ளனர்.