ஆப்கான் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முற்றிலும் கைப்பற்றி விட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாளில் ஆட்சி அமைந்து விடும் என்பது உறுதியாகிவிட்டது.. தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிப்பதாக சீனா, பாகிஸ்தான் அறிவித்துள்ளது.. அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி தப்பி ஓடி ஓமனில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
அந்நாடே பெரும் பதற்றத்துடன் இருக்கிறது.. அங்கு பல கட்டுப்பாடுகள் இருப்பதால் அந்நாட்டை விட்டு அனைவரும் வெளியேற துடிக்கின்றனர்.. அதேபோல அரசு ஊழியர்களும் பயத்துடன் இருக்கின்றனர்..
இந்த நிலையில் ஆப்கன் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பலாம் என்று தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. மேலும் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..