Categories
உலக செய்திகள்

அடுத்த அதிரடி!…. பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் தலிபான்கள்…. உலக நாடுகள் கடும் கண்டனம்….!!!!

ஆப்கானிஸ்தானில் ‘ஹிஜாப்’ அணியாமல் ஒளிபரப்பாகும் பெண்களின் டிவி சீரிஸ் நிகழ்ச்சிகளுக்கு தலிபான்கள் அதிரடியாக தடை விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் தலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனால் மனித உரிமை அமைப்புகளும், உலக நாடுகளும் தலிபான்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தலிபான்கள் அடுத்த அதிரடியாக ‘ஹிஜாப்’ அணியாமல் டிவி சீரிஸ்களில் ஒளிபரப்பாகும் பெண்களின் நிகழ்ச்சிக்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளனர்.

மேலும் டிவி சீரிஸ்களில் ஹிஜாப் அணியாமல் பெண்கள் காட்டப்படுத்தல், இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு எதிரான இசை நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்களுக்கு ஆப்கானிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தலிபான்கள் சர்வதேச டிவி சீரிஸ்களில் ஒளிபரப்பாகும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கும் தடை விதித்துள்ளார்கள். அதேபோல் ஷரியா சட்டம் மற்றும் ஆப்கானிஸ்தானின் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு முரணாக டிவி சீரிஸ்களில் ஒளிபரப்பப்படும் வெளிநாட்டு ஊடகங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |