Categories
அரசியல்

தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் நேரடியாக பொருட்கள் வழங்க தடை… மீறினால் சட்டப்படி நடவடிக்கை!

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர தமிழக அரசு தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள், பால் உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்கப்படும், மக்கள் தேவையில்லாமல் வெளியே வர கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இவர்களுக்கு  தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர்  நிவாரண நிதியாகவும், உணவுப்பொருட்களையும்  வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தனியாக நிவாரணம் வழங்க அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்றுநோய் பரவுவதை தடுக்க, ஊரடங்க உத்தரவு அமலில் உள்ள நிலையில், சில மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதில்,  கொரோனா  நோய் தொற்று நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்களும், பல்வேறு அமைப்பினரும் நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையர் , நகராட்சி ஆணையரிடம்  தரலாம். சமூக இடைவெளி பின்பற்றாமல் பல்வேறு அமைப்பினர் உணவுப்பொருட்கள் தனியாக விநியோகிப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆகவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தனியாக நிவாரணம் வழங்க அரசு தடை விதித்துள்ளது. சில நபர்கள், அரசியல் கட்சிகள், கட்சியினர் நேரடியாக பொருட்களை வழங்குவது தடை உத்தரவை மீறும் செயல். அரசின் உத்தரவை மீறி நிவாரண பொருட்கள் வழங்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  கூறியுள்ளது.

 

 

https://twitter.com/TNGOVDIPR/status/1249268435722186757

 

Categories

Tech |