கன்னியாகுமரியில் டியூசன் ஆசிரியரை 16 வயது மாணவன் கத்தியால் குத்தி தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் பிஎட் பட்டம் முடித்த 25 வயது இளம்பெண் தனது வீட்டில் 15 மாணவ மாணவிகளுக்கு டியூஷன் வகுப்பு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்குள் ஆள் இல்லாத சமயத்தில் நுழைந்த 16 வயது சிறுவன் ஒருவன் ஆசிரியரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பின் ஆசிரியர் சத்தமிட உன்னை சும்மா விட்டால் நான் தவறாக நடக்க முயன்றதை பலரிடம் சொல்லி விடுவாய் என்று கூறி,
அவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியர்கள் தலையில் மற்றும் வயிற்றில் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளான். இதையடுத்து கத்திக்குத்து வாங்கிய ஆசிரியர் வலியால் அவதிப்பட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின் மாணவனை கைது செய்யக்கோரி மருத்துவமனை வளாகத்தில் பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்த சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.