இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆசிரியரிடம் மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சக்தி குமாரபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் பால்ராஜ் நகரை சேர்ந்த கலைமதி என்ற ஆசிரியையும் பள்ளியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது மடப்புரம் ஆட்டூர் வழியாக சென்று கொண்டிருந்த போது அவர்களை பின்தொடர்ந்து மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த மர்மநபர்கள் சக்தி அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளனர். இதில் நிலை தடுமாறி சக்தி கீழே விழுந்துள்ளார். இதுகுறித்து அவர் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.