இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு சுழற்பந்து வீச்சாளர் பிரவின் தாம்பே தனது 44 ஆவது வயதில் ராஜஸ்தான் அணிக்காக ஐ.பி.எல். போட்டியில் விளையாடியவர். தற்போது 48 வயது நிரம்பிய அவரின் பெயர் 2020 ஐ.பி.ல். போட்டிக்கான ஏலத்தில் அறிவிக்கப்பட்டது. 20 லட்சம் அவருக்கு அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டது. அவர் அதிக வயது உடையவரென்பதால் எந்த அணியினரும் ஏலம் எடுக்கமாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆச்சரியமளிக்கும் வகையில் பிரவின் தாம்பேவை ஏலம் எடுத்தது. பிரவின் தாம்பேவை ஏலம் எடுத்த கொல்கத்தா அணியை மற்ற அணி உரிமையாளர்கள் கை தட்டி வரவேற்றனர்.