Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெளிய போகாத… தொடர்ந்து சித்திரவதை… மனமுடைந்து பெண் எடுத்த சோக முடிவு..!!

சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்று  கணவர் வீட்டார் கூறி சித்திரவதை செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் போடி கே.எம்.எஸ். லே-அவுட் பகுதியைச் சேர்ந்த பாலமுருக கணேஷ்  என்பவருக்கும், போடி மதுரை வடக்குத் தெருவைச் சேர்ந்த மகாராஜன் என்பவரின் மகள் 27 வயது லிங்கேஸ்வரிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக கல்யாணம் நடந்து முடிந்தது. இந்த தம்பதிக்கு தற்போது 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கணவர் பாலமுருக கணேஷ் கேரள மாநிலம் மூணாறில் பூக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

தற்போது நிலவி வரும் ஊரடங்கால் மாநில எல்லைகள் மூடப்பட்டதால் கடந்த 3 மாதங்களாக வீட்டிற்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், தன்னுடைய குழந்தையுடன் வீட்டில் வசித்து வந்த லிங்கேஸ்வரி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதற்க்காக லிங்கேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் தெரியாமல் புலம்பிய பெற்றோர்கள், எனது ,மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாலமுருக கணேஷின் பெற்றோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் கைகலப்பாக மாறி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து இறந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து லிங்கேஸ்வரியின் தந்தை மகராஜன் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.. அவர் கூறியதாவது, திருமணம் செய்த நாளிலிருந்தே தன்னுடைய மகள் லிங்கேஸ்வரியை அவரது கணவர் மற்றும் குடும்பத்தார் வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லக்கூடாது, விழா காலங்கள், விசேஷ நிகழ்ச்சிகளில் பங்கேற்ககூடாது என தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளனர்.

இந்தக் கொடுமை தாங்க முடியாமல் தனது மகள் தற்கொலை செய்துகொண்டார் என போடி போலீஸ் ஸ்டேஷனில் தெரிவித்துள்ளார்.. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

Categories

Tech |