மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மாசிலாமணி என்பவன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசையாக பேசி தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளான்.
இந்தநிலையில், 2 நாள்கள் சிறுமியை பல இடங்களுக்கு கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவருகிறது.. இதற்கிடையே நேற்று இரவு மாணவியை தன்னுடைய ஊரில் விட்டு விட்டு மாசிலாமணி தப்பியோடியதாகசொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மாசிலாமணி மீது புகாரளித்தனர்.. இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், மாசிலாமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைதுசெய்து வாடிப்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் சிந்துபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.