கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதியில் ஒரு பெண்மணி நடந்து சென்று கொண்டிருந்தார். அந்தப் பெண்ணிடம் பீகாரை சேர்ந்த ஒரு வாலிபர் நகையை பறிப்பதற்கு முயற்சி செய்துள்ளார். இதனால் பயந்து போன அப்பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வாலிபரை துரத்தியுள்ளனர். இதனால் வாலிபர் ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறியுள்ளார். அதோடு யாராவது அருகில் வந்தால் மின்கம்பத்திலிருந்து குதித்து விடுவேன் என்றும் வாலிபர் மிரட்டியுள்ளார். உடனே பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு போன் செய்து மின் சேவையை துண்டிக்குமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஒரு மணி நேரமாக வாலிபர் கீழே இறங்காமல் போக்கு காட்டியுள்ளார். இதை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் வாலிபரை சமாதானம் செய்து கீழே இறக்கிய நிலையில், அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு மனநல காப்பகத்தில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.