கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் சாமியை தரிசிக்க வருவதால் அவர்களை விதிமுறைகளைப் பின்பற்றி நிர்வாகிகள் உள்ளே அனுமதித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணத்தினால் முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது பரவலின் தாக்கம் குறைந்து இருப்பதினால் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களை அனைவரும் சாமியை தரிசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தொற்று தாக்கம் குறைந்த காரணத்தினால் தற்போது கோவில்களில் பக்தர்களை சாமியை தரிசனம் செய்ய அனுமதித்துள்ளனர்.
இதில் இம்மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரபலமான கோவில்களான காஞ்சி காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர், வரதராஜபெருமாள் மற்றும் குமரக்கோட்டம் முருகன் போன்ற கோவில்கள் திறக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இம்மாவட்டத்தில் உள்ள காந்தி ரோட்டில் அமைந்திருக்கும் வழகருதீஸ்வரர் கோவிலில் மண்டல இணை ஆணையர் ஜெயராமன் மேற்பார்வையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் அடிப்படையில் 642 கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகுதான் தரிசனத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் தரிசனம் முடிந்த பிறகு பக்தர்கள் வெளியேறும் வழியில் கட்டைகள் மூலமாக வளைவு அமைத்து செல்வதற்காக வைத்திருக்கின்றனர். இதில் கோவிலின் உள்ளே அர்ச்சனை செய்வதற்கும் மற்றும் தேங்காய் உடைப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆனால் விபூதி, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் தட்டுகளில் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு கோயிகள் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியுடன் சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.