கியூபா மற்றும் ஜமாக இடையே அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர நிலநடுக்கங்களால்சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 2.7 to 6.12 அளவில் நிலநடுக்கங்கள் கியூபா மற்றும் அதற்கு அருகில் உள்ள தீவுப்பகுதிகளில் பதிவாகி இருப்பதாக அமெரிக்க இயற்கை பேரிடர் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஆழிப் பேரலைகள் தாக்கலாம் என அஞ்சப்படும் சூழ்நிலையில், நிலநடுக்கம் காரணமாக ஜமாய்க்கா மற்றும் மியான்மரில் மக்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் விட்டு வெளியேறினர்.
தொலைதூரத்தில் உள்ள புளோரிடாவில் சுனாமி எச்சரிக்கையால் அச்சம் காணப்பட்டது. 300 கிலோ மீட்டர் சுற்று வட்டாரம் வரை சுனாமி அலைகள் மிகப்பெரிய அளவில் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு. பின்னர் இயல்பு நிலை ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. ஆயினும் இந்த நிலநடுக்கங்களில் உயிர் சேதம் குறித்த விவரம் வெளியாகவில்லை.