Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து வந்த திருட்டு… சிசிடிவி கேமராவில் சிக்கினர்… கைது செய்த போலீசார்…!!

நெல்லையில் மீன் வைக்கும் பெட்டியை திருடி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்துள்ள செட்டிகுளம் பகுதியில் ரமேஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரி முட்டம் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தொழிலுக்காக மீன்களை ஏற்றுவதற்கு மீன் பெட்டிகளை அவரது வீட்டின் அருகில் ஒரு இடத்தில் அடுக்கி வைத்துள்ளார்.  இதனையடுத்து அந்த பெட்டிகள் அடிக்கடி திருடு போவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இது குறித்து ரமேஷ் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பினு குமார் அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தை சேர்ந்த மார்த்தாண்ட பூபதி(25),  கருப்பசாமி(22) ஆகிய இருவர் இத்தகைய திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |