அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் புகுந்து அலுமினியம் அச்சுகள் திருடிய ஆவடியைச் சேர்ந்த ஆனந்த் ராஜ், முருகா, ராஜேஷ், அம்பத்தூரைச் சேர்ந்த பாபு, மற்றும் 17 சிறுவன் ஆகிய ஐந்து பேரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.80000 பணம், 60 அலுமினிய அச்சுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், சிறுவன் மட்டும் நீதிமன்ற பிணையில் வெளியான நிலையில், எஞ்சிய நான்குபேரும் அம்பத்தூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். இன்று (நவ.07) அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க காவல்துறையினர் திட்டமிட்டிருந்த நிலையில், நான்கு பேரும் காவல் நிலையத்திலிருந்து தப்பியுள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.