செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோவை சம்பவம் குறித்து எதுவுமே சொல்லாமல் இருக்கும் முதல்வரின் செயல், மிகவும் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரிய விஷயமாகத்தான் இதை பார்க்கிறோம். வாய் திறக்காம இருக்காரு. ஏன் வாய் திறக்காமல் இருக்காருன்னு தெரியல? இவ்வளவு பெரிய அளவுக்கு, ஒரு தற்கொலை தாக்குதல் நடத்த உத்தேசித்து இருக்கலாம். அதன் அடிப்படையில் முன்னாடியே வெடிச்சிருக்கு.
ரெண்டு நாளுக்கு தீபாவளிக்கு முன்னாடியே… இந்த நிகழ்ச்சி நடந்திருக்கு. அன்னைக்கு நடக்கலைன்னா, வேற என்னைக்கு நடந்திருக்கும். தீபாவளிக்கு கூட நடந்து இருக்கலாம் இல்லையா? அப்போ எத்தனை பேர் உயிர் பறிபோற நிலைமை இருக்கும். அதை யோசிக்கணும். அதனால இத வந்து சாதாரணமா எடுத்துக்க முடியாது. இது நாள் வரையில் வாய் திறக்காமல், எல்லாருமே மௌனம் காப்பது, பெரிய அளவிற்கு கண்டனத்திற்குரிய விஷயமாக தான் கருதுகிறோம்.
இன்னைக்கு தான் பெரிய அளவுக்கு கூட்டம் தலைமை செயலகத்துல போட்டு இருக்காங்க போல.முதலமைச்சர் அதில் பங்கு பெற்றாரா என்பது எனக்கு தெரியவில்லை. கோயம்புத்தூரில் பெரிய அளவிற்கு தாக்குதல். ஏற்கனவே 1998 இல் நடைபெற்றது. 58 உயிர்கள் பலி வாங்கப்பட்டது. இது நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம். தமிழ்நாட்டை உலுக்கிய ஒரு சம்பவம்.
அப்படிப்பட்ட வெடிகுண்டு சம்பவம் கேஸ் சிலிண்டர் வெடித்தது. அந்த நிகழ்வில் அரசு இத்தனை நாள்… நான்கு நாட்களாக தீபாவளி மயக்கத்திலே இருக்கிறார்கள் என்பது தான் வருத்தப்படக்கூடிய வேதனைபடக்கூடிய கண்டனத்திற்குரிய ஒரு விஷயம். காவல்துறை 75 கிலோ வெடி மருந்து கைப்பற்றி இருக்காங்க என சொல்லி இருக்காங்க தானே.இதை NIA வந்து விசாரிக்க போகுது. தமிழ்நாடு ஸ்டேட் போலீஸ் விசாரிக்க போகுது.
அதுக்குள்ள நான் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. ஆனால் பெரிய அளவிற்கு நாட்டையே உலுக்குகின்ற ஒரு விஷயத்தில் அரசை பொருத்தவரையில், முதலமைச்சரை பொறுத்தவரையில் மௌனம் காப்பது ஏன்? வாய் திறக்காமல் இருப்பது ஏன்? இன்னைக்கு மீட்டிங் போடுறாங்கன்னா… இத்தனை நாள் என்ன பண்ணாங்க? அதுதான் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கேள்வியாக இருக்கிறது என விமர்சித்தார்.