Categories
கிரிக்கெட் விளையாட்டு

#WIvInd ஒருநாள் போட்டி “தொடரை கைப்பற்றுமா.?” இன்று பலப்பரீட்சை..!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே  நடைபெறும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது

இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இத்தொடரில் முதலில் நடைபெற்ற 3 டி-20 போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இந்திய அணி வென்றது.

Image

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ட்ரினிடாட்டில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி ஏற்கனவே 2-ஆவது ஒருநாள் போட்டியை கைப்பற்றியுள்ளதால் இன்று நடைபெறும் போட்டியையும் கைப்பற்றி ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்க உள்ளது.

Image

அதே சமயம் இன்றைய போட்டியில் வென்று தொடரை சமன் செய்வதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்றைய போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |