ஆப்பிரிக்க நாடான போஸ்வானாவில் உலகின் மூன்றாவது பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆபிரிக்க நாட்டில் 1095-ஆம் ஆண்டில் 3,106 காரட் அளவு கொண்ட உலகிலேயே மிகப்பெரிய வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து போஸ்வானா நாட்டில் கடந்த 2015-ஆம் ஆண்டு 1,109 காரட் அளவு கொண்ட இரண்டாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போஸ்வானா நாட்டில் 1,908 காரட் அளவு கொண்ட மூன்றாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரசு துணையுடன் இயங்கும் டப்ஸ்வானா என்ற நிறுவனத்தால் கடந்த 1-ஆம் தேதி 52 மில்லி மீட்டர் அகலமும், 73 மில்லி மீட்டர் நீளமும், 27 மில்லி மீட்டர் தடிமனும் கொண்ட இந்த வைரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரக்கல்லை போஸ்வானா அரசு கொரோனா காலம் முடிந்தவுடன் ஏலம் விட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.