Categories
அரசியல் மாநில செய்திகள்

தூங்கி முழிச்சதும் யோசனை…! கண்ணு உறுத்திகிட்டே இருக்கு… கைது பீதியில் அதிமுக ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  திருச்சியில் அரிவாள் எடுத்துக்கொண்டு தன் மனைவிக்கு  ஓட்டு போடவில்லை என்று விரட்டி விரட்டி வெட்டுகிறார். இந்த சர்வாதிகாரி எங்கே போனார்? இன்றைக்கு தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முழுக்க குட்டிசுவராகி உள்ளது…  ஒரு பெண் காரில் செல்கிறார், அந்த பெண்ணை காருடன் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம், ஒரு நாளைக்கு மூன்று கொலை,

இது போல் தமிழ்நாடு கொலை கொலையா முந்திரிக்கா மாதிரி தினமும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டபஞ்சாயத்து போன்ற விஷயங்கள் சர்வ சாதாரணமாக சர்வாதிகாரி ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.சர்வதிகாரத்தை பொருத்தவரையில் ஒரு இரும்பு கரத்துடன் அடக்கி ஒடுக்க வேண்டியது…  சட்ட ஒழுங்கு யார் கையில் எடுத்துக் கொண்டு சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்துகின்றார்களோ அவர்களிடம் காண்பிக்க வேண்டும். நிர்வாகத்தில் தப்பு செய்பவர்கள் மீது சர்வாதிகாரத்தை காமிக்க வேண்டும்.

ஆனால் எதிர் கட்சிகளை ஒடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் மீது  போய் வழக்கு போட வேண்டும், குறிப்பாக அதிமுக மீது தூங்கி எழுந்தாலே அவருக்கு கண் உறுத்தும், இன்றைக்கு என்ன செய்வது அதிமுகவை என்று ? அப்படி கண்உறுத்தி அதிமுகவை  எப்படி அழிக்கலாம் என்ற ஒரு யோசனை அதுல தான் சர்வதிகாரியாக இருக்காரே ஒழிய, நாட்டு மக்களுக்கு நல்ல ஒரு அரசு அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என தெரிவித்தார்.

Categories

Tech |