சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
கூடுதல் படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை அமைக்கவும் உத்தரவிட்டபட்டுள்ளது. சென்னையில் நோய் தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நோய்த்தாக்கம் அதிகம் உள்ள மண்டலங்களில் தலா 3,000 படுக்கைகள் ஏற்படுத்தவும்,
பாதிப்பு குறைவான இடங்களில் தலா 1,5000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். அணைத்து மண்டல அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,145 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 5,504 பேர் குணமடைந்துள்ள நிலையில் 89 பேர் உயிரிழந்துள்ளனர்.