Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு விரும்பும் தித்திப்பான பாசிப்பருப்பு பாயசம் – எளிதாக வீட்டில் செய்யலாம்! 

விரத கால உணவில் மற்றும் வழிபாட்டிற்கான படையல்களில் இனிப்புக்காக செய்யப்படும் உணவாக பாசிப்பருப்பு பாயாசம் பெரும்பாலும் செய்யப்படுகிறது. இது சுவையும் சத்தும் மிக்கது. எளிதான முறையில் பருப்பு பாயசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: 

பாசிப்பருப்பு – 1 கப்,
பச்சரிசி மாவு – 2 ஸ்பூன்,
வெல்லம் – 1 கப் (துருவியது),
நெய் – 1/4 கப்,
முந்திரி – 10,
உலந்த திராட்சை – 10,
ஏலக்காய் – 3 ,
தேங்காய் துருவல் – 1/2 கப்,
உப்பு – தேவையான அளவு 

செய்முறை:

 முதலில்ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாசிப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்த பின் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். வெந்த பருப்பை நன்கு மசித்து விடவும். 

நன்றாக மசித்தபின்னர் பச்சரிசி மாவு தண்ணீர் விட்டு கலக்கி பருப்பு கலவையில் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கவும். வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி கரைய விடவும். வெல்லம் கரைந்ததும் எடுத்து வேக வைத்த பருப்பில் வடிகட்டி ஊற்றவும். பருப்புடன் ஏலக்காய், வெல்லத்தை சேர்த்ததும் நன்கு கிளறி விட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். இதனுடன் வறுத்த முந்திரி, திராட்சையைகொட்டவும். தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கி பரிமாறலாம். சுவையான பாசிப்பருப்பு பாயாசம் ரெடி! 

Categories

Tech |