Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“கழிப்பறை கட்டி கொடுக்கவில்லை” கலெக்டரிடம் மனு கொடுத்த மாற்றுத்திறனாளியை…. வெட்டி சாய்த்த கொடூரம்…!!

முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து கலெக்டரிடம் புகார் கொடுத்தவரை அரிவாளால் வெட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சூரம்பட்டி கிராமத்தில் ஊராட்சி செயலர் கண்ணன் மற்றும் செயற்குழு ஊராட்சி மன்ற தலைவரின் மகன் அசோக்குமார் ஆகியோர் கழிவறை கட்ட ஒப்பந்தம் போட்டிருந்துள்ளனர். ஆனால் இதுவரையும்  கிராம மக்களுக்கு கழிப்பறை கட்டி கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்ட இவர்கள், 100 நாட்கள் வேலைக்கு ஆட்களை அனுப்பியதாக பொய்யான தகவல்களை அரசுக்கு அனுப்பி முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது குறித்து தகவலை அந்த பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளியான ராமச்சந்திரன் என்பவர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக கலெக்டர் தலைமையில் ஊழல் தொடர்பாக உரிய விசாரணை நடத்த கூடாது  என்ற நோக்கத்தோடு புகார் அளித்த ராமச்சந்திரனை 5 க்கும் மேற்பட்டவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராமச்சந்திரன்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ராமச்சந்திரனை கொலை செய்ய முயன்றதாக மோகன், பாலாஜி, ஊராட்சி செயலாளர் கண்ணன் மற்றும் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர் மகன் அசோக்குமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |