உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆயிரத்தை தாண்டியது. உலகளவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது. இதுவரை கொரோனோவால் 7,37,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 10,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஜூலை 24ல் ஒலிம்பிக் போட்டி தொடங்க இருந்த நிலையில் கொரோனா அச்சத்தால் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க ஜப்பான் விடுத்த பரிந்துரையை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் ஏற்றுக் கொண்டு ஓராண்டு ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
இந்த நிலையில் அடுத்தாண்டு ஜூலை 23ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் யோஷிரோ மோரி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23 – ஆக., 8 வரை நடைபெறும் என அறிவித்துள்ளார். 2021ல் ஜூலை 23 – ஆக., 8 வரை ஒலிம்பிக் போட்டியும், ஆக., 24 – செப்., 5 வரை பாரா ஒலிம்பிக் போட்டியும் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.