பிரித்தானியாவில் ஒரு பேருந்து நிலையத்தில் இராணுவ ரகசிய ஆவணங்கள் குப்பை போல் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் ரகசிய ஆவணங்கள் கென்ட் மாகாணத்தில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் குப்பை போல் கிடந்துள்ளது. மேலும் பிரித்தானிய ராணுவம் மற்றும் எச்.எம்.எஸ் டிஃபென்டர் போர்க்கப்பல் குறித்த விவரங்கள் அந்த ஐம்பது பக்க ஆவணத்தில் இருந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அந்த ரகசிய ஆவணங்களில் கடந்த திங்கட்கிழமை அன்று நடந்த அமெரிக்க-பிரித்தானிய பாதுகாப்பு உரையாடலில் இருந்து குறிப்புகள் மற்றும் ஆயுத ஏற்றுமதி பற்றிய புதுப்பிப்புகள் இருந்துள்ளது.
மேலும் அந்த ஆவணங்களில் உக்ரேனிய கடல் வழியாக கிரிமியா கடற்கரையிலிருந்து கப்பல்கள் செல்வதற்கு ரஷ்யா தனது ஆத்திரத்தை வெளிபடுத்தும் என்று அதிகாரிகள் கூறியிருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து ராணுவ இருப்புக்கு சாத்தியமான திட்டங்கள் உள்ளிட்ட பக்கங்களும் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் உயர் ரகசிய ராணுவ ஆவணங்கள் பேருந்து நிலையத்தில் எப்படி கிடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.