வடகிழக்கு பருவமழை இயல்பாகிவிட 2 சதவீதம் அதிகம் பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. இதனால் கடந்த 3 மாதத்துக்கு தமிழகத்தில் உள்ள வடக்கு, தெற்கு என அனைத்து மாவட்டங்களையும் இந்த ஆண்டு பருவமழை வெள்ளக்காடாக்கியது.
எப்போதும் தமிழகத்துக்கு 60 சதவீத மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2 சதவீதம் அதிகமாக மழையை கொடுத்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மழையை நம்பி இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் இயல்பை விட 18 சதவீதம் அதிகம் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.