பாலத்தை கடக்க முயன்ற வியாபாரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் டவுன் நடராஜபுரம் பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில் நிலையங்களில் முறுக்கு வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது நடராஜபுரம் தரை பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின் ஆபத்தை உணராமல் குபேந்திரன் தரை பாலத்தை கடக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது அவர் நிலை தடுமாறி விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதுபற்றி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தத் தகவலை அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.