திருவாரூர் மாவட்டம் பேரளம் அய்யனார் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஐயப்பன். தச்சு வேலை செய்துவரும் ஐயப்பனுக்கு தனலட்சுமி (வயது 34 ) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு அபிநயா (12) மற்றும் மாதேஷ் (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி தனலெட்சுமி தன்னுடைய வீட்டின் அருகே உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தனலட்சுமியை மீட்டு உடனே திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், நேற்று சிகிச்சைப் பலனினளிக்காமல் தனலட்சுமி இறந்தார். கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த தனலெட்சுமி தனியார் நிதி நிறுவனம் மற்றும் தனி நபர்களிடம் அதிக கடன் வாங்கியதாகவும், அவர்கள் வீட்டுக்கு வந்து கடனை திருப்பி தருமாறு கேட்டு மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மனவேதனையடைந்த தனலட்சுமி தீக்குளித்துள்ளார்.. இந்தசம்பவம் குறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.