கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து வந்ததை தொடர்ந்து அதன் பின்னணி குறித்து விசாரித்ததில் பல சோகக் கதைகள் தெரியவந்துள்ளது.
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டம் சவுசா கிராமத்தில் நதிக்கரையில் ஆயிரக்கணக்கான சடலங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர். இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை செய்த போது பீகார் மாநிலம், உத்தர பிரதேச மாநிலத்தையும், உத்தரபிரதேச மாநிலம் பீகார் மாநிலத்தையும் மாறி கைகாட்டி இவர்கள் தான் செய்தார்கள் என்று குறை கூறி வந்தனர். இதையடுத்து இந்த நதியானது இரு மாநில எல்லை பகுதி என்பதால் சடலங்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆசியாவின் மிகப்பெரிய கிராமம் என கூறப்படும் கஹ்மார் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு 15 முதல் 19 உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கிராமத்தில் ஒரு தகனமேடை இருப்பதால் ஒரு நாளைக்கு மூன்று உடல்களை மட்டுமே எரிக்க முடியும். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து உடல்களை எரிக்கும் அவலம் நேர்கிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் என்றால் உறவினர்கள் கூட உடலை தூக்குவதற்கு வர மறுக்கின்றனர். இதன் காரணமாகவே உடல்களை கிராமத்திலுள்ள மக்கள் கங்கையில் விடுகின்றன.
உடல்களை எரிப்பதற்கு, தகனம் செய்யும் மரங்களின் விலை அதிகமாக இருப்பதன் காரணமாகவும், தற்போது உள்ள சூழ்நிலையில் பணம் இழப்பு, வேலையின்மை நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் அவற்றை தகனம் செய்ய முடியாமல் இந்த முடிவுகளை எடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 70 சதவீத உடல்களை ஆற்றில் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் பெரும்பாலான குடும்பங்கள் தினசரி கூலி வேலைகளை செய்து வருகின்றன. அவரிடம் எந்த சேமிப்பும் இல்லாத சூழ்நிலையில் இப்படி முடிவுகளை எடுக்கும் நிலை உருவாக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.