Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

120 அடி உயர் மின் கோபுரத்திலிருந்து கிழே குதித்து இளைஞர் தற்கொலை…!!

120 அடி உயர் மின் கோபுரத்தின் மேலிருந்து கிழே குதித்து 19 வயது இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியான வீரனமலை பகுதியை சேர்ந்தவர் கேசவன்.. இவருக்கு வயது 19 ஆகிறது.. இவர் பிட்டர் தொழிலாளி ஆவார்.. ஆந்திரப் பிரதேச  மாநிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியில் பிட்டராக இவர் வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றால் ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது சொந்த ஊரான வாணியம்பாடி பகுதிக்கு வந்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக வீட்டில் இருந்த அந்த இளைஞர், தும்பேரி செட்டி குட்டை பகுதியில் தனியார் விவசாய நிலத்தில் அமைத்துள்ள 120 அடி உயர் மின் கோபுரத்தின் மேல் ஏறி அங்கிருந்து கிழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அம்பலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீசார், இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை காதல் தோல்வியா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |