சென்னை சிந்தாதிரிப்பேட்டை முக்கி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் லட்சுமி. 27 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் பிரசவத்திற்கான தேதி நெருங்கியதால் கடந்த 24ஆம் தேதியன்று திருவல்லிக்கேணியில் இருக்கும் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் லெட்சுமி பிரசவத்திற்காக சென்றுள்ளார்.
அதைத்தொடர்ந்து அங்கு நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.. இதில் அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால், லட்சுமி மயக்க நிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் சிறிது நேரம் கழித்து லட்சுமி மற்றும் அவரது குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அவரது கணவரிடம் போய் தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்தச் சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் துறையினர் புகாரளித்தார்.. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.