ஆந்திரபிரதேச மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 9 மாத கர்ப்பிணி ஒருவர், டூத் பேஸ்ட்க்கு பதில் தவறுதலாக எலி மருந்தை (rat killer) உபயோகித்து பல்துலக்கியுள்ளார்.. இதையடுத்து 2 நாள்கள் கழித்து அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் சோர்வடைய தொடங்கியுள்ளது. பின்னர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அந்த கர்ப்பிணி பெண் பரிதாபமாக இறந்தார். தெரியாமல் செய்த தவறால் 2 உயிர்கள் பறிபோயிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.