”காப்பான்” படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தின் முன்னனி நடிகர்களுள் ஒருவரான சூர்யா என். ஜி . கே படத்திற்கு பின் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை அயன், மாற்றான் படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா சய்கல் மற்றும் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் ராணி, என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் காப்பான் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இப்படம் அடுத்த வருகின்ற செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.