‘கொடி’ திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ்-ஆர்.எஸ். துரை செந்தில்குமார் கூட்டணி இரண்டாவது முறை இணையும் படம் ‘பட்டாஸ்’. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்ஸாதா நடித்துள்ளார். சினேகா, நாசர், முனீஷ்காந்த், நவீன் சந்திரா, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திலும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இரட்டை இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இசையமைக்கின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வரும் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில் ப்ரோ, ஜிகிடி கில்லாடி, முரட்டு தமிழன்டா உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனிடையே படத்தின் வண்ணமயமான டிரெய்லர் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
TG Thyagarajan presents, @dhanushkraja in #PattasTrailer Grand Pongal 2020 Worldwide Release 🎉https://t.co/CkWNUwk0JS
@durairsk @actress_Sneha @Mehreenpirzada @Naveenc212 @iamviveksiva @MervinJSolomon @LahariMusic
— Sathya Jyothi Films (@SathyaJyothi) January 7, 2020