தெலுங்கு உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவியின் “சைரா நரசிம்மா ரெட்டி” படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் ராயலசீமாவில் வாழ்ந்த உய்யாலவாடா நரசிம்ம ரெட்டி என்ற சுதந்திர போராட்ட வீரருடைய உண்மை வாழ்க்கை வரலாரை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் “சைரா நரசிம்மா ரெட்டி”. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஹீரோ தெலுங்கு உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி.
மேலும் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா அமிதாப் பச்சன், சுதீப் ஜெகதி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார் ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் ராஜீவன் கலை இயக்கம், கமலக்கண்ணன் விஷுவல் எஃபக்ட்ஸ் என பிரம்மாண்டமாக இப்படம் உருவாகியுள்ளது.
படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டீசர் 5 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் “சைரா நரசிம்மா ரெட்டி” படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகிள்ளது. இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை, பல வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.