பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’, தனுஷின் ‘பட்டாஸ்’ என இரு படங்களும் மோதுகின்றன. இதனால் ஒரே குடும்பத்தில் போட்டி நிழவுவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் ‘தர்பார்’ திரைப்படம் 9ஆம் தேதியிலும், ‘பட்டாஸ்’ திரைப்படம் 16ஆம் தேதியிலும் வெளியாகும் தகவலையடுத்து தனுஷ் ரசிகர்களுக்கு ‘பட்டாஸ்’ படக்குழு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஒன்றை அளிக்க உள்ளது.
‘தர்பார்’ படம் வெளியாகும் அன்றே ‘பட்டாஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் எனவும் ‘தர்பார்’ பட பிரின்ட்களிலும் ‘பட்டாஸ்’ பட ட்ரெய்லர் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. ‘கொடி’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் துரை செந்தில்குமார் தனுஷை வைத்து இயக்கும் திரைப்படம்தான் ‘பட்டாஸ்’. படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் தனுஷுக்கு சினேகா, மேஹ்ரீன் பிர்சாடா ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர். ‘தர்பார்’ படம் வெளியாகும் அன்றே ‘பட்டாஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாவதால் தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது.