Categories
சினிமா தமிழ் சினிமா

நல்லபடியாக சிகிச்சை முடிந்தது…. வீட்டிற்கு திரும்பிய அர்ச்சனா….!!!

பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனல்களான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சி சேனல்களில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அர்ச்சனா. இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது.

தொகுப்பாளினி அர்ச்சனாவிற்கு மூளைப் பக்கத்தில் ஒரு ஓட்டை இருப்பதால் அதற்கு அவர் சர்ஜரி செய்து கொள்ளப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.

மேலும் சிகிச்சைக்கு பின் தான் எப்படி இருக்கிறேன் என்பதையும் தனது மகள் தெரிவிப்பார் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அர்ச்சனா தற்போது மருத்துவமனையிலிருந்து நல்லபடியாக வீடு திரும்பி உள்ளதாகவும், அவர் விரைவில் உங்களை சந்திப்பார் என்றும் அவரது மகள் சாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Categories

Tech |