Categories
தேசிய செய்திகள்

விளையாட்டால் விபரீதம் … மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் பலி ..!!

ஆந்திராவில் விளையாடிக்கொண்டு இருந்த மூன்று சிறுவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர் . 

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கோப்பரா  கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சகோதரர்களான ஷேக் அதான், ஷேக் காசிம் மற்றும் அவரது நண்பர் என் பதான் அமீர் ஆகியோர் அந்த பகுதியின்  கொடிக் கம்பத்தை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது , திடீரென அந்த கம்பத்தின் அசைவு அதிகமாகி அருகில் இருந்த மின்சார கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி அம்மூவரும் தூக்கி எறியபட்டனர் .

Image result for மின்சாரம் தாக்கி சிறுவர்கள்

இதனை பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கூச்சலிட்டனர் . அதன் பின் மூன்று சிறுவர்களும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதன்பின் ,  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவர்களின் சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |