புதுக்கோட்டை மாவட்டத்தில் டைல்ஸ் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி தீடிரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து டைல்ஸ் ஏற்றிக்கொண்டு வந்த கண்டெய்னர் லாரி ஒன்று திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருமயம் அருகேயுள்ள மேலூர் கிராமத்தில் லாரி சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை லாரி இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் லாரி டிரைவரை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.