முக.ஸ்டாலினிடம் மாநிலங்களவை சீட் கேட்டதற்கு கொடுக்க மறுத்து விட்டதாக கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி கூறும்போது , தமிழ்நாட்டில் நடைபெறும் சிஏ போராட்டத்தை அரசு ஒடுக்குகிறது. அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மாநிலங்களவை சீட்டு பங்கீட்டு கொள்வது குறித்து திமுகவுடன் எந்தவித உடன்பாடும் நாங்கள் மேற்கொள்ளவில்லை.ஆனாலும் திமுகவிடம் சீட்டு கேட்டபோது திமுக தலைவர் முக. ஸ்டாலின் மறுத்துவிட்டார். அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்ததாக அழகிரி கூறினார்.