நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாறன் என்ட்ரி கொடுக்கும் அதிரடி ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அதிரடி திருப்பம் ஏற்பட போகிறது. இந்த சீரியலில் தற்போது முத்துராசை கொன்றது காயத்ரி தான் என்று உண்மை தெரியவந்துள்ளது.
ஆகையால் இதிலிருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற மாயன் தனது முழு சொத்தையும் மாசாணிக்கு எழுதி கொடுத்துவிட்டார். இதையடுத்து மாயன் அவரது குடும்பத்தினருடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இந்நிலையில் யாரும் சற்றும் எதிர்பாராத திருப்பமாக அந்த இடத்திற்கு மாயனின் சகோதரன் மாறன் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். இந்த அதிரடியான ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.