சின்னத்திரை நடிகை காயத்ரி சிவன் போல் வேடமிட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர் 2. இந்த சீரியலில் நடிகை காயத்ரி மாயனின் தங்கையாக நடித்து வருகிறார். சரவணன் மீனாட்சி, வாணி ராணி போன்ற சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, விஜய் டிவியில் MR .MRS சின்னத்திரை நிகழ்ச்சியிலும் தனது கணவருடன் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், நடிகை காயத்ரி அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சிவன் போல் வேடமிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CUuk3oHh-id/