அமெரிக்காவில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர் சிறைச்சாலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நியூ ஜெர்சியில் பள்ளி ஆசிரியரான ஜோசப் மெகோவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய வீட்டின் அருகே 7 வயது சிறுமியான ஜோன் என்பவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 7 வயது சிறுமியான ஜோன் கடந்த 1973-ஆம் ஆண்டு தனது அம்மாவிடம் நான் சீக்கிரம் வீட்டிற்கு திரும்பி வந்துவிடுவேன் என்று கூறிவிட்டு தனது வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
அதற்கு காரணம் அந்த சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த பள்ளி ஆசிரியரான ஜோசப் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரை கொலையும் செய்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் பிரேதம் அடுத்த நாள் அங்கிருந்த பூங்கா ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காவல்துறையினர் குற்றவாளியான ஜோசப்பை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
மேலும் அவருக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது. பல வருடங்களாக ஜோசப் சிறையில் இருந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் திடீரென உயிரிழந்துள்ளார். ஆனால் அவர் இறந்ததற்கான காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.