கிழக்கு லண்டனில் உள்ள எக்செல் எனப்படும் கண்காட்சி அரங்கம்தான், தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. 9 நாட்களில் கட்டப்பட்டுள்ள இந்த நைட்டிங்கேல் (NHS Nightingale) மருத்துவமனை 4,000 படுக்கை வசதிகள் கொண்டது. இந்த மருத்துவமனையை நேற்று இளவரசர் சார்லஸ் திறந்து வைக்கப்பட்டதையடுத்து செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இதில் வென்டிலேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மின்னல் வேகத்தில் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், இந்த மருத்துவமனை பாதுகாப்பு படைகள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகியோரின் உதவியோடு ராக்கெட் வேகத்தில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.